ரத்தம் வழியும் நிலையில் காரில் சென்ற பென்னிக்ஸ்…. ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன் ?- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்ததற்கான அடையாளங்களும் உடற்கூராய்வில் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பென்னிக்ஸின் போர்வையில் ரத்தக்கறை படிந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி, “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்ற காரின் இருக்கையிலும் ரத்தக்கறை படிந்து உள்ளது. இப்படியிருக்க, மருத்துவர் எப்படி உடற்தகுதி சான்றிதழ் அளித்தார் ? மாஜிஸ்திரேட் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார் ? சிறை அதிகாரிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் எதற்காக சிறையில் அடைத்தனர் ? இவற்றுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிந்தும் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன் ? ” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை...

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...
Open

ttn

Close