அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது; அதனால் வழங்கப்படாது- கனிமொழி

 

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது; அதனால் வழங்கப்படாது- கனிமொழி

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது; அதனால் வழங்கப்படாது- கனிமொழி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை திமுக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி வழங்கினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,“கொரோனா தொற்று அதிகம் பரவிய நேரத்தில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக அரசு இரண்டாவது தொற்று பரவல் அலையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருமண உதவித்தொகை என்ற திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். குறிப்பாக பத்தாவது படித்து முடித்தால் மட்டுமே பெண்களுக்கு திருமண உதவி என்ற திட்டத்தை கொண்டு வந்து, பல பெண்களை படிக்கச் செய்தார்.

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது; அதனால் வழங்கப்படாது- கனிமொழி

அந்த வரிசையில் தான் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் பயணம் இலவசம் என்பதை முதலமைச்சர் ஆனவுடன் ஸ்டாலின் அறிவித்தார். முன்பு பெண்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு ஆண்கள் வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஆண்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையை திமுக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் ஏற்றதாழ்வுகளை தகர்த்தவே தவிர, யாருடைய வாய்ப்பையும் பறிக்க அல்ல. காலிப் பணியிடங்களை மட்டுமே தமிழக முதல்வர் நிரப்பியுள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது, ஆகவே தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது” எனக் கூறினார்.