தேர்தல் பணியால் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை… கனிமொழி காட்டம்

 

தேர்தல் பணியால் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை… கனிமொழி காட்டம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுகள் மே. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

தேர்தல் பணியால் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை… கனிமொழி காட்டம்

மே 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி போட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுவருகிறது. இதனிடையே வாக்குப்பதிவன்று தேர்தல் பணியாற்றிய ஏராளமான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் கனிமொழி, “ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்த பெருந்தொற்று காலத்திலும் கடும் சவால்களுக்கு இடையே செய்து முடித்துள்ளனர். இதில் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.