கனிமொழி புறக்கணிப்பு – கலகலக்கும் திமுக

 

கனிமொழி புறக்கணிப்பு – கலகலக்கும் திமுக

திமுகவில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக அடுத்தடுத்து நடைபெற்றுவரும் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டங்களை கனிமொழி திட்டமிட்டே புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கும் திமுகவில் அண்மைக்காலமாக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு அதிகளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

கனிமொழி புறக்கணிப்பு – கலகலக்கும் திமுக

கட்சி அனுபவம் எதுவும் இல்லாத நிலையிலும் ஒரே நாளில் இளைஞரணி செயலாளராக உயர்த்தப்பட்ட உதயநிதி, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனங்களிலும் பங்களிப்பு செய்வதாகக் கூறுகிறார்கள். சென்னைக்கு செல்லும் மாவட்ட நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து சலாம் வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
இப்படி உதயநிதியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்க, எதிர்முகாமில் கருணாநிதி காலத்திலேயே அரசியலில் களமிறக்கப்பட்ட கனிமொழியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. உப்புசப்பில்லாத மகளிரணி செயலாளர் பதவியில் இருக்கும் அவர், கட்சி நிர்வாகத்தில் வலுவான பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் சமீபத்தில் செய்யப்பட்ட நியமனங்களில் அப்படி எதுவும் கிடைக்காததால் மிகுந்த அப்செட் ஆனார் கனிமொழி. இது தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கனிமொழி புறக்கணிப்பு – கலகலக்கும் திமுக


இந்த சமயத்தில்தான் டி.ஆர் பாலுவை தலைவராகக் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பத்தோடு பதினொன்றாக கனிமொழி நியமிக்கப்பட்டார். இது கனிமொழியின் கோபத்தை பலமடங்கு எகிறச் செய்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதன் காரணமாக கோவை, ஈரோடு, நாமக்கல் என அடுத்தடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களை கனிமொழி திட்டமிட்டே புறக்கணித்தார். பலமுறை நினைவூட்டப்பட்ட நிலையிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அவர். இந்தத் தகவல் ஸ்டாலினுக்கும் சொல்லப்பட, ‘’மேற்கொண்டு அழைக்க வேண்டாம். தானாக வந்தால் வரட்டும்’’ என சொல்லியிருக்கிறார் அவர்.

கனிமொழி புறக்கணிப்பு – கலகலக்கும் திமுக


தொகுதி நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் தற்போது தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளார் கனிமொழி. அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ’’அண்மைக்காலமாக கனிமொழி திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வருகிறார், மகன் உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்கு இடையூறாக இருப்பார் என்கிற எண்ணத்தில் ஸ்டாலின் இப்படி செயல்படுகிறார். பெயருக்கு ஏற்றபடி சாதாரண கட்சித் தொண்டர்களிடம் கூட கனிவுடன் பழகும் கனிமொழிக்கு இயற்கையாகவே பெருகிவரும் செல்வாக்கை அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்டுவரும் அவமரியாதைகளை கனிமொழி மிகுந்த பொறுமையுடன் எதிர்கொண்டு வருகிறார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஸ்டாலின் தரப்பினர் உணரும் காலம் தொலைவில் இல்லை’’ என்றார்கள்.