புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..

புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..

மகாராஷ்டிரா அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை என மகாராஷ்டிரா அரசை நடிகை கங்கனா விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிவண்டி நகரத்தில் 43 ஆண்டுகள் பழமையான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று அதிகாலையில் அந்த குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..
பாலிவுட் நடிகை கங்கனா ரானவத்

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தை, தனது அலுவலகம் இடிக்கப்பட்டதுடன் தொடர்புப்படுத்தி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மற்றும் மும்பை மாநகராட்சியை விமர்சனம் செய்துள்ளார். எனது அலுவலகத்தை சட்ட விரோதமாக இடிக்கும் நேரத்தில் அந்த கட்டிடத்தில் கவனம் செலுத்தி இருந்தால் பல பேர் உயிருடன் இருந்திருப்பார்கள் என கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..
சஞ்சய் ரவுத், உத்தவ் தாக்கரே

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டிவிட்டரில், உத்தவ் தாக்கரே, சஞ்சய் ரவுத் மற்றும் பிரஹன்மும்பை மாநகராட்சி எனது அலுவலகம் சட்டவிரோதமாக உடைக்கப்பட்டபோது, அந்த நேரத்தில், இந்த கட்டிடத்திற்கு அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்று சுமார் 50 பேர் உயிருடன் இருந்திருப்பார்கள். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் கூட, உங்கள் கவன குறைவால் (அடுக்குமாடி குடியிருப்பு விபத்து) பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை போல கூட கொல்லப்படவில்லை. மும்பையில் என்ன நடக்கும் என்று கடவுளுக்குத் தெரியும் என பதிவு செய்து இருந்தார்.