சர்ச்சை ட்வீட்… கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

 

சர்ச்சை ட்வீட்… கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், குயின் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டது. நடிகையாக மட்டுமில்லாது தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

சர்ச்சை ட்வீட்… கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

சினிமா வாழ்க்கை ஒரு புறமிருக்க, கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சர்ச்சை தரும் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு, அம்மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்தும் மம்தா பானர்ஜியின் வெற்றி குறித்து விமர்சிக்கும் வகையில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கங்கனா ரணாவத்தின் ட்வீட்களுக்கு கண்டனக் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில், கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டுள்ளது.