கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து : 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

 

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து : 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே உள்ள மதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்து திடீர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கற்குவியலுக்குள் ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், கற்குவியலுக்கு அடியில் இருந்து 2 பேரை சடலமாக மீட்டனர். அதோடு, விபத்தில் படுகாயம் அடைந்த சிலர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து : 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

கல்குவாரி விபத்தில் 8 பேர் காணாமல் போனதாகவும் அவர்கள் கற்குவியலுக்கு 200மீ அடியில் புதைந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த 8 பேரை மீட்கும் பணி 2ஆவது நாளாக தொடங்கியிருக்கிறது. விபத்து நேர்ந்த இடத்தில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த நிலையில், கல்குவாரி உரிமையாளர்கள் 2 பேர் மீது 2 பிரிவுகளில் சாலவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.