காஞ்சிபுரத்தில் வேகமெடுக்கும் கொரோனா; மேலும் 350 பேருக்கு பாதிப்பு உறுதி!

 

காஞ்சிபுரத்தில் வேகமெடுக்கும் கொரோனா; மேலும் 350 பேருக்கு பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் வேகமெடுக்கும் கொரோனா; மேலும் 350 பேருக்கு பாதிப்பு உறுதி!

குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 9,094 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, நேற்று குணமடைந்து பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.