நன்கொடை கணக்கு கேட்ட திக்விஜய சிங்… நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான்.. ராமர் கோயில் அறக்கட்டளை பதிலடி

நன்கொடை கணக்கு கேட்ட திக்விஜய சிங்… நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான்.. ராமர் கோயில் அறக்கட்டளை பதிலடி

கடந்த காலத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராமர் கோயிலுக்காக திரட்டிய நிதி விவரங்களை கேட்ட திக்விஜய சிங்குக்கு, அந்த நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான் என்று ராமர் கோயில் அறக்கட்டளை பதிலடி கொடுத்தது.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ரூ.1.11 லட்சம் நன்கொடை வழங்கினார். கூடவே, கடந்த காலத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராமர் கோயிலுக்காக திரட்டிய நிதி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்துங்க என்று பிரதமர் மோடிக்கு திக்விஜய சிங் கோரிக்கை விடுத்து இருந்தார்.

நன்கொடை கணக்கு கேட்ட திக்விஜய சிங்… நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான்.. ராமர் கோயில் அறக்கட்டளை பதிலடி
ராமர் கோயில் (மாதிரி படம்)

திக்விஜய சிங்கின் கேள்விக்கு, அந்த நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான். அதனால் அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை திறந்து அவர்கள் சரிபார்க்கலாம் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பதிலடி கொடுத்து்ளளது. அந்த அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபால் இது தொடர்பாக கூறியதாவது: ராமர் கோயிலுக்கு தடை விதிக்கப்பட்ட அந்த நேரத்தில் காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. அனைத்து நிதிகளும் அவர்கள் (காங்கிரஸ்) அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அனைத்து பொறுப்புகளும் அவர்களின்கீழ் (அரசாங்கம்) பணியாற்றிய ஆணையரிடம் வழங்கப்பட்டது.

நன்கொடை கணக்கு கேட்ட திக்விஜய சிங்… நிதியை நிர்வகித்தது காங்கிரஸ்தான்.. ராமர் கோயில் அறக்கட்டளை பதிலடி
காமேஷ்வர் சவுபால்

எங்கள் அறக்கட்டளையை ஒப்படைத்தவர்கள் அதனை திறந்து சரிபார்க்கலாம். மேலும் கோயிலை கட்டுவதற்கு தேவையான முழுச் செலவு தொகையையும் எங்களால் சொல்ல முடியாது. ஆனால் அதில் ஒரு அருங்காட்சியகமும் இருக்கும். இதனால் மக்கள் ராமரை பற்றி அறிந்து கொள்ளலாம். ராமர் கோயில் பகுதிக்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனா். கோயில் கட்டிய பிறகு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.