திருக்குறள், பாரதியார் கவிதை சொன்னதெல்லாம் நடிப்பு! மோடியை சாடிய கமல்

 

திருக்குறள், பாரதியார் கவிதை சொன்னதெல்லாம் நடிப்பு! மோடியை சாடிய கமல்

தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடவில்லை. புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை உரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டுவர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட கொள்கை வடிவத்தை இதுவரை தமிழில் வெளியிடவில்லை. மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ் மொழியிலும் அதை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்குறள், பாரதியார் கவிதை சொன்னதெல்லாம் நடிப்பு! மோடியை சாடிய கமல்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல.

மேடை பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது” என விமர்சித்துள்ளார்.