கேடு கெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்குப் பொறுப்பேற்பார்களா? கமல்ஹாசன்

 

கேடு கெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்குப் பொறுப்பேற்பார்களா? கமல்ஹாசன்

சென்னை எண்ணூரை சேர்ந்த விக்ரம், டிப்ளமோ படித்தவர். இவர் வீச்சூரில் தண்ணீர் பிளாண்ட் பிசினஸ் செய்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும் நிலையில் 40 லட்சம் ரூபாய் கடனாகி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கேடு கெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்குப் பொறுப்பேற்பார்களா? கமல்ஹாசன்

இந்நிலையில் கேடுகெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்கு பொறுப்பு ஏற்பார்களா என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் எண்ணூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் விக்ரம் முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நெஞ்சம் பதறுகிறது.

நான் லஞ்சப் பட்டியல் வெளியிட்டபோது மக்கள்தான் திருந்த வேண்டுமென சொன்ன கேடு கெட்ட அமைச்சர்கள் விக்ரமின் சாவுக்குப் பொறுப்பேற்பார்களா?” என பதிவிட்டுள்ளார்.