சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? – கமல்ஹாசன்

 

சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? – கமல்ஹாசன்

கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்கு ஆரோக்ய சேது செயலி உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அனைவரது செல்போன்களிலும் இதை டவுன்லோட் செய்து கொண்டு ப்ளூடூத் ஆன் செய்து வைத்துக்கொண்டால், அருகாமையில் உள்ள கொரோனா நோயாளிகள் பற்றிய தகவல் கிடைத்து, அவர்களிடம் இருந்து விலகி இருக்கமுடியும் என்று கூறப்பட்டது. இதனை மத்திய,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கட்டாயமாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . 

சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? – கமல்ஹாசன்

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பலக்கோடிக்கணக்கானோர் இதனை தரவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா இருக்கும் இடங்கள், அதிகம் நோய்ப்பரவும் இடங்கள், கொரோனா அறிகுறி உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். இதனிடையே ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றது என்றும் உங்களின் சொந்த தகவல்கள் திருடப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பல மாதங்கள் முன்பே எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்பதே எங்களுக்கு தெரியாது என மத்திய மின்னணு மற்றும் தகவ தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சவுரவ் தாஸ் என்பவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “‘தகவல் அறியும் உரிமை’ கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம். சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது. அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகார வர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது. சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்?யாரிடம் தகவல்கேட்பது?” என வினவியுள்ளார்.