தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்- கமல்ஹாசன்

 

தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்- கமல்ஹாசன்

கோவை – தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மார்ச் 15-ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற ‘தென்னிந்தியாவின் 2021’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “ஊழலற்ற ஆட்சியைத் தருவோம். காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர். நாங்களும் அப்படித்தான். எம்.எல்.ஏ ஆன பின்பும் எம்.ஜி.ஆர். சுமார் 50 படங்களில் நடித்தார். சினிமா என்பது தொழில், அரசியல் என்பது நோக்கம். தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்; என் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டேன்.

Image

வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன். அதுவே இன்று நடந்திருக்கிறது. அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம். மேலும் திமுக, அதிமுகவில் கூட சில நல்லவர்கள் உள்ளனர்” எனக் கூறினார்.