பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

 

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவல்லிகேணி தொகுதி மக்களிடம் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். வெள்ளீத்திரையில் உலக நாயகனாக விஸ்வரூபம் எடுத்து சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நிரூபிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

திருவல்லிக்கேணியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “காங்கிரஸின் இருப்பை இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்கள்தான் பி டீம். இந்த ஊழல்வாதிகளுக்கு நான் ஒத்துபோகவில்லை என்பதால் என்னை பி டீம் என்று ஆரம்பித்து வைத்தவர்களே திமுகதான். எங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகி வருவதை பார்த்து தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர், தூதுவிட்டவர் பலர். நான் கூறுகிறேன் நான் விற்பனைக்கு அல்ல, மக்கள் நீதி மய்யமும் விற்பனைக்கு அல்ல மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்” எனக் கூறினார்.

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

காமராஜர் என்னுடைய பெரியப்பா. நான் படிக்கவில்லை என்பதால் என்னை கூத்தாடி என திட்டுவார். ஆனால் நான் பெரிய கூத்தாடியாக வந்து பின்னாலில் அவர் செய்த வேலையை நான் செய்வேன் என்று அவருக்கு அன்று தெரியாது. முதல் ஆட்சிகாலத்தில் 50 லட்ச வேலைவாய்ப்பு வழங்குவோம், வேலையின்மையை குறைப்போம். இங்கு திமுகவா? அதிமுகவா? ஆட்சியா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும். அதற்காகதான் நாங்கள் வந்திருக்கிறோம்

சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இட ஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சாதிப்பவர்களை பார்த்துதான் ஓட்டு போடுபார்கள் சாதிகாரனை பார்த்து போட மாட்டார்கள். தேர்தல் வருகிறது என்பதால் வலுவான சாதிகளை தங்களுடன் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இவ்வளவு நாள் வன்னியர்கள் இவர்களுக்கு தெரியவில்லையா? மக்கள் நீதிமய்யம் நேர்மையானவர்களின் கூடாரம், நாளை தமிழகத்தின் கோட்டை. ஏழ்மையின் அருங்காட்சியகமாக தமிழகம் காட்சியளிக்கிறது.