சாதி பார்த்து ஓட்டுப்போடாதீர்கள்; சாதிப்பவர்களை பார்த்து ஓட்டுப்போடுங்கள்- கமல்ஹாசன்

 

சாதி பார்த்து ஓட்டுப்போடாதீர்கள்; சாதிப்பவர்களை பார்த்து ஓட்டுப்போடுங்கள்- கமல்ஹாசன்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், “கோபிசெட்டிபாளையம் மக்களுக்கு அன்பிற்குரியவான மாறப்போகிறேன். மக்கள் ஒவ்வொருவரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட உரிமை உள்ளது. எனக்கும் உரிமை உள்ளது. கோவிட் நேரம் என்பதால் என்னை கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். நான் குடும்பத்திற்குள் செல்கிறேன் எனக்கூறினேன். சாதி பார்த்து ஓட்டுப்போடாதீர்கள் சாதிப்பவர்களை பார்த்து ஓட்டு போடுங்கள். உங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்க வேண்டும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இனிமேல் நிறைய வேலை உள்ளது. கோபிசெட்டிப்பாளையம் மார்க்கெட் திறந்து 9 மாத காலம் ஆச்சு எதையோ திறக்கிற அரசாங்கம் மார்க்கெட் திறக்காததது ஏன்?

சாதி பார்த்து ஓட்டுப்போடாதீர்கள்; சாதிப்பவர்களை பார்த்து ஓட்டுப்போடுங்கள்- கமல்ஹாசன்

மக்கள் பணியில் அனுபவஸ்தர்கள் எங்களுடன் இணைகிறார்கள். நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஊரெல்லாம் தேடி நல்லவர்களை இணைக்க முயற்சி செய்கிறோம். மக்களுக்கு நல்லது நடக்கும் சித்தாந்தத்தோடு எங்களோடு யார் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். ரஜினி தெரிவிக்கும் கருத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது” எனக் கூறினார்.