Home அரசியல் பிக்பாஸ் மேடையில் பரப்புரையா? கையில் கட்சி சின்னத்துடன் களமிறங்கிய கமல்!

பிக்பாஸ் மேடையில் பரப்புரையா? கையில் கட்சி சின்னத்துடன் களமிறங்கிய கமல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 16ம் தேதி அக்கட்சி கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், 40 மட்டுமே கலந்து கொண்டனர். அதன் முடிவில், ஒருமித்த கருத்துக்களுடைய கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளரோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலேயே பிசியாக இருக்கிறார். இடையிடையே மக்கள் பிரச்னைகள் குறித்து ட்வீட் செய்வதும் உண்டு.

குறிப்பாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை தனக்கான அரசியல் மேடையாகவே பயன்படுத்திவருகிறார் என சொல்லலாம்.அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், குறைகளை கமல்ஹாசன் பிக்பாஸ் மேடை வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். நக்கலாகவும், காமெடியாகவும் அதிமுக அரசின் குறைகளை கூறும் இடமாக பிக்பாஸ் மேடையை கமல்ஹாசன் பயன்படுத்திவருகிறார். அங்கு ஒரு சில நேரங்களில் பொடி வைத்து பேசுவது டபுள் மீனிங்கில் உரையாடுவதும் கமலின் வாடிக்கை. இது பொதுவான இடம் இங்கே பேசுவது நிறைய பேருக்கு போய் சேரும் என பிக்பாஸ் மேடையில் கமல் அடிக்கடி சொல்வது. மற்றொரு விஷயம் என்னவென்றால் வாரவாரம் கமல் அணிந்துவரும் உடையும் பிக்பாஸ் வீக் எண்ட் ஷோவின் ஹை லைட் என்றே சொல்லலாம்.

அந்தவகையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு கரும் ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்திருந்தார். அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் தனது மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னம் அச்சிடப்பட்டிருந்தது. அதற்காகவோ என்னவோ இன்றைய பிக்பாஸ் ஷோவில் கமல் கையை ஆட்டி ஆட்டி அதகளப்படுத்தினார்.

டிவியில் தான் இந்த அக்கப்போறு என சோஷியல் மீடியா பக்கம் வந்தால், ட்விட்டரில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக #எங்கள்ஓட்டுகமலுக்கு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. திட்டமிட்டு செய்யப்படும் வேலைகளா அல்லது தற்செயலாக நடக்கிறதா என சற்று குழப்பமும் ஏற்படுகிறது. ஆனால் இதெல்லாம் மக்களின் மனதை மாற்றவும், சட்டமன்ற தேர்தல் முடிவுகளை புரட்டிப்போடவும் எடுபடாது என்பதே நிதர்சனம்

மாவட்ட செய்திகள்

Most Popular

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்கியிருக்கிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

வீடு வீடாக சென்ற அமித் ஷா… குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

பொன். ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம்...

பெண்ணுக்கு பணம் தேவை -அவருக்கு பெண் தேவை -கடைசியில் நடந்ததை பாருங்க.

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

லலிதா ஜுவல்லரியில் ரூ.1000 கோடி மோசடி; சேதாரம் என்று வரி ஏய்ப்பு

லலிதா ஜுவல்லரியின் 27 கிளைகளில் கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வந்த சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் பிடிபட்டது.
TopTamilNews