சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை!

 

சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ளன. அதனால் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு தளர்த்திய உடனே திமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இன்றே தொடங்குமாறு அதிமுக தலைமை தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதே போல அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பணியை பிற கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை!

நாம் தமிழர் கட்சி, தேர்தலை தனித்து களம் காணும் என சீமான் அறிவித்தார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை!

தி.நகரில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் முடிவில் இதனை பற்றிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.