தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

 

தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தம் இல்லாத ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக திமுக தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

அந்த புகார் குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த குளறுபடியும் நடக்கவில்லை. தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவற்றை ஹேக் செய்ய முடியாது. அவை சாதாரண கால்குலேட்டர் மாதிரி தான் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், மே 2ம் தேதி வாக்குப்பதிவு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும் சிறிய தொகுதிகளில் 14, பெரிய தொகுதிகளில் 30 மேஜைகள் வைத்து வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

இந்த நிலையில், சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அவர் பேசியதாக தெரிகிறது. முழு தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.