கோவை தெற்கை தட்டித் தூக்கும் கமல்ஹாசன்.. டார்ச் லைட்டுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்?

 

கோவை தெற்கை தட்டித் தூக்கும் கமல்ஹாசன்.. டார்ச் லைட்டுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாருக்கும் ட்விஸ்ட் கொடுத்த கமல்ஹாசன் தான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் ஏன் அந்த தொகுதியை தேர்வு செய்தார் என்பது இன்னமும் சரிவர தெரியவில்லை.

கோவை தெற்கை தட்டித் தூக்கும் கமல்ஹாசன்.. டார்ச் லைட்டுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்?

கமல்ஹாசன் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது, அனைவரது கவனமும் திமுக பக்கம் திரும்பியது. அதாவது அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க டிடிவி தினகரன் களமிறங்கியதை போல, திமுகவின் வாக்குகளை சிதறடிக்க கமல்ஹாசன் களமிறங்கி இருப்பதாக சொல்லப்பட்டது. திமுகவின் வாக்குகள் பிரிந்து வானதி சீனிவாசனுக்கு வாக்கு வங்கி தானாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவை அனைத்துமே தற்போது சுக்கு நூறாகியுள்ளது.

இரண்டு பேருமே மக்களுக்கு பிரபலமான முகங்கள் தான். இருந்தாலும் கமல்ஹாசனுக்கு வானதியை விட மவுசு கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வானதிக்காக ராதாரவி, நமீதா, ஸ்மிருதி என ஒரு பட்டாளமே களமிறங்கியது. ஆனால், கமல்ஹாசன் தனக்கு தானே களமிறங்கியதும் மக்கள் கவனம் முழுதும் கமல்ஹாசன் பக்கம் திரும்பியது.

கோவை தெற்கை தட்டித் தூக்கும் கமல்ஹாசன்.. டார்ச் லைட்டுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்?

இது குறித்து பேசிய சிலர் அரசியல் நோக்கர்கள், தற்போதைய நிலவரப்படி கமல்ஹாசனுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. தனக்காகவும் தனது கட்சிக்காகவும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். எந்த தொகுதிக்கு போனாலும் இரவில் கோவை தெற்குக்கு ஹெலிகாப்டரில் வந்து விடுகிறார். அதனால், மக்கள் எப்போதும் அவர் இங்கு இருப்பது போலவே உணருகின்றனர் என்று கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் பார்த்தால், கோவை தெற்கு தொகுதியின் 2.5 லட்சம் வாக்குகளில் கமல்ஹாசன் எளிதாக 90 ஆயிரம் வாக்குகளை பெற்று விடுவார் என்பது போல தெரிகிறது. காங்கிரஸ் வேட்பாளரான மயூரா மவுனம் காப்பதும் கமல்ஹாசனுக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்து கமல்ஹாசன் கோவை தெற்கை தன் வசப்படுத்துகிறாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!