தேர்தலில் படுதோல்வி.. தீவிர ஆலோசனையில் கமல்ஹாசன்!

 

தேர்தலில் படுதோல்வி.. தீவிர ஆலோசனையில் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை ஒதுக்கிய கமல்ஹாசன் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை களமிறக்கினார்.

தேர்தலில் படுதோல்வி.. தீவிர ஆலோசனையில் கமல்ஹாசன்!

தங்களது வேட்பாளர்களை பல்லக்கில் ஏற்ற தனது சொந்த செலவில், ஹெலிகாப்டரில் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் கமல்ஹாசன். ஹெலிகாப்டரில் அவர் செல்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவர் தொய்வடையவில்லை. பகலில் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இரவு நேரத்தில் தான் போட்டியிடும் தொகுதியான கோவை தெற்குக்கு திரும்பி விடுவார். அங்கும் பம்பரமாக சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தலில் படுதோல்வி.. தீவிர ஆலோசனையில் கமல்ஹாசன்!

இவ்வாறு அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டும், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்துள்ளது. கமல்ஹாசன் போட்டுயிட்ட கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும் இவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி வாகை சூடினார். மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளான பொன்ராஜ், ஸ்ரீ பிரியா, சினேகன் உள்ளிட்ட அனைவரும் தோல்வியைச் சந்தித்தனர். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3.71 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி, இந்த முறை 2.45 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மையம் மய்யம் தோல்வி அடைந்ததன் காரணம் குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் துணை முதல்வர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது அவர் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.