துப்பாக்கிச்சூடு எதிரொலி…. சுமாவாலி, மெஹ்ரான் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு… காங்கிரஸ் வலியுறுத்தல்

துப்பாக்கிச்சூடு எதிரொலி…. சுமாவாலி, மெஹ்ரான் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு… காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய பிரதேசம் சுமாவாலி, மெஹ்ரான் தொகுதிகளில் துப்பாக்கி சூடு நடந்ததையடுத்து அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. ஒட்டு மொத்த அளவில் இடைத்தேர்தலில் 66 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின. அதேசமயம் இடைத்தேர்தல் நடந்த சுமாவாலி மற்றும் மெஹ்ரான் தொகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு எதிரொலி…. சுமாவாலி, மெஹ்ரான் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு… காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மேற்கோள்காட்டி, சுமாவாலி மற்றும் மெஹ்ரான் சட்டப்பேரவை தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமாவாலி மற்றும் மெஹ்ரானில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். சுமாவாலியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மொரினாவிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

துப்பாக்கிச்சூடு எதிரொலி…. சுமாவாலி, மெஹ்ரான் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு… காங்கிரஸ் வலியுறுத்தல்
கமல் நாத்

இந்த சம்பவங்கள் அனைத்து பா.ஜ.க.வின் விரக்தியை நிரூபிக்கின்றன. கடந்த சில தினங்களாக நிர்வாகம், போலீஸ் மற்றும் மது ஆகியவற்றை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. கஹூஸ்டில் காவல் துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் பணம் விநியோகப்படுவது தொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் வாக்காளர்கள் விற்பனைக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.