மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது… கமல் நாத் குற்றச்சாட்டு..

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது… கமல் நாத் குற்றச்சாட்டு..

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தலில் பெரிய தோல்வி அடைவோம் என்பதை உணர்ந்ததால் பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கமல் நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் வரும் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது. இடைத்தேர்தலில் கணிசமான இடங்கள வென்றால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதேசமயம் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே காங்கிரசின் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது… கமல் நாத் குற்றச்சாட்டு..
கமல் நாத்

இத்தகைய சூழ்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அண்மையில் நடந்து முடிந்த 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் உண்மைக்கு முழு மனதுடன் வாக்களித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது… கமல் நாத் குற்றச்சாட்டு..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

பா.ஜ.க. தாங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறோம் என்பதை உணர்ந்துள்ளனர். ஆகையால் அவர்கள் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. மக்களை மறந்து விட்டது மற்றும் மீண்டும் குதிரை பேரத்தை தொடங்கி விட்டது. பா.ஜ.க. சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை அணுகினர். மத்திய பிரதேச மக்கள் இந்த அரசை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.