“அமைச்சரவை விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம், நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?”

 

“அமைச்சரவை விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம், நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?”

பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராஜ்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாவர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

“அமைச்சரவை விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம், நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?”

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்..ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.