“பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்” : கமல் ஹாசன் ட்வீட்!

 

“பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்” : கமல் ஹாசன் ட்வீட்!

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்” : கமல் ஹாசன் ட்வீட்!

இதுகுறித்து நடிகரும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணாமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கிலோ வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்யப்படுகிறது . மழை காரணமாக நவம்பர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐப்பசி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் வெங்காய தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

“பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்” : கமல் ஹாசன் ட்வீட்!

அதே சமயம் எகிப்து வெங்காயமும் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்தி இல்லத்தரசிகளின் கவலையை போக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவது கவனிக்கத்தக்கது.