பாஜக, காங்கிரஸ் உடன் மோதும் கமல்ஹாசன்! சென்னையை புறக்கணித்தது ஏன்?

 

பாஜக, காங்கிரஸ் உடன் மோதும் கமல்ஹாசன்! சென்னையை புறக்கணித்தது ஏன்?

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது. கமல்ஹாசனின் கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் ஐஜேகே கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? என்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதேபோல் கமல்ஹாசன் ஆலந்தூரிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியதால் அந்த தகவல் உறுதியானது. கடந்த மக்களவை தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் சென்னையை பொறுத்தவரையில் அதிக வாக்குகளை பெற்றது. எனவே கமல்ஹாசன் சென்னையிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸ் உடன் மோதும் கமல்ஹாசன்! சென்னையை புறக்கணித்தது ஏன்?

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிக்கு அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அதில் கமல்ஹாசனின் பெயரும் இருக்கும். கோவை – தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக – காங்கிரஸ்க்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.