நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

 

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

ஆடி மாத கேட்டை நட்சத்திரம் சைவ சமயம் போற்றும் சிவனடியர்களான 63 நாயன்மார்களில் கலியநாயனார், கோட்புலிநாயனார் ஆகியோரின் குருபூஜை நாளை 30.07.2020.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடியில் பிறந்த கலியனார் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்று வாழ்ந்தார்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதர் சன்னதியின் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் ஏற்றுகிற திருப்பணியில் தம்மை அர்ப்பணித்திருந்தார்.

கலிய நாயனாரின் பக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு ஈசன் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய கலியநாயனார் கோயில் திருவிளக்கிடும் பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிடைத்த பொருளை கொண்டு விளக்கேற்றும் திருப்பணியைத் தொடர்ந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் விளக்கேற்றும் பணியை விடாது செய்யும் பொருட்டு வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் வீட்டு மனையை விற்றதுடன் கடைசியாய் மனைவியையும் விற்க முன்வந்தார்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

மனைவியை வாங்க யாரும் முன்வரததால் வேதனை தாளாமல் திருக்கோயில் திரும்பி படம்பக்கநாதர் சன்னதி முன் பணிந்து தொழுது இறைவா திருவிளக்கு ஏற்றும் பணி நின்று விடுமானால் நான் வாழ்ந்தென்ன பயன் எனவே எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாத அகல் விளக்குகளில் என் ரத்தத்தை ஊற்றி ஏற்றுவேன் என உறுதிபூண்ட கலியநாயனார் வாள் எடுத்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். நாயனாரது உறுதி கண்டு உளமகிழ்ந்த ஈசன் தோன்றி, கலியனாரின் கரம் பற்றி தடுத்து நிறுத்தினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைய கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு சிவபெருமான் திருவருள் புரிந்தார்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

கோட்புலி நாயனாரின் குருபூஜையும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. காவிரி பாயும் சோழவள நாட்டிலே நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் வீரவேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டரான இவர் சோழ மன்னின் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வீரம் வளர்த்த கோட்புலியார் சிவனாரிடத்தில் எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற பொருளை கொண்டு நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !

சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை கோட்புலியார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

நித்தமும் சிவமயம் என வாழ்ந்த சிவனடியார்கள்… கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை சிறப்பு !
போரில் வென்று ஊர் திரும்பிய கோட்புலியார் சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட ஒருவன் நாயனாரிடம், ஐயா பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என வேண்டினான். அதை கேட்ட நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் பாலை உண்டவன் அல்லவா என கூறி அக்குழந்தையையும் வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது சிவபெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை தொலைத்து கைலயாத்தில் ஈசனுடன் இருந்து இன்புற்று வாழ்வர் என்று அருள் புரிந்தார் . கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!

இந்நன்நாளில் அடியார்கள் பாதம் பணிந்து ஈசனருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.

-மு.ரா.சுந்தமூர்த்தி.