மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் மாதிரி நடிக்கிறார்.. 30 தொகுதிகளிலும் நாங்கதான் ஜெயிக்கிறோம்.. பா.ஜ.க.

 

மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் மாதிரி நடிக்கிறார்.. 30 தொகுதிகளிலும் நாங்கதான் ஜெயிக்கிறோம்.. பா.ஜ.க.

மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் மாதிரி நடிக்கிறார், 2ம் கட்ட தேர்தல் நடந்த 30 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிக்கிறோம் என பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நேற்று 2ம் கட்டமா மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய பொதுச்செயலாளருமான விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 50 ஆண்டு கால மேற்கு வங்க வரலாற்றில், இந்த நேரம் போல் இதற்கு முன் இது போன்ற அமைதியான வாக்குப்பதிவு நடந்தது இல்லை. சிறு சம்பவங்கள் நடந்தாலும், முன்பு போல் குண்டர்கள் வாக்கு சாவடியை கைப்பற்றுவது, வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்காது போன்றவற்றுக்கு முடிவு கட்டப்பட்டது.

மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் மாதிரி நடிக்கிறார்.. 30 தொகுதிகளிலும் நாங்கதான் ஜெயிக்கிறோம்.. பா.ஜ.க.
கைலாஷ் விஜய்வர்கியா

ஜனநாயகத்துக்கு அவர்கள் பங்களித்த விதத்துக்காக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய படைகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். தேர்தல் சிறப்பாக நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட தேர்தலில் 30 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மத்திய படைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று மம்தாவின் குற்றச்சாட்டு, பா.ஜ.க.வினர் வாக்குசாவடிகளை கைப்பற்றினர் என்று டெரிக் ஓ பிரியனின் குற்றச்சாட்டுக்களை தோல்வியின் அடையாளமாக நான் நினைக்கிறேன். மக்கள் தங்களுடன் இல்லை என்பதை அவர்கள் தெரிந்து உள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் மம்தாவுக்கும், மக்களுக்கும் இடையிலான தேர்தல். மக்கள் அவருடன் இல்லை.

மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் மாதிரி நடிக்கிறார்.. 30 தொகுதிகளிலும் நாங்கதான் ஜெயிக்கிறோம்.. பா.ஜ.க.
முதல்வர் மம்தா பானர்ஜி

ஏனென்றால் மம்தா தனது தொகுதியில் எங்கு சென்றாலும் மக்கள் ஜெய ஷிய ராம் என்று கோஷமிடுவதன் மூலம் இது தெளிவாகிறது குறிப்பிட்ட மக்கள் மட்டுமே மம்தாவை ஆதரிக்கின்றனர். தேர்தல் நடக்கும்போது பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறான் என்று மம்தாவின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு, மம்தா ஜி புத்திசாலி ஆனால் அறிவில்லாதவர் போல் நடிக்கிறார். தேர்தல் எங்கும் நடந்தாலும், தலைவர்கள் அங்கு பிரசாரத்துக்கு செல்ல மாட்டார்கள் ஆனால் மற்ற பகுதிகளுக்கு செல்வார்கள். இதுதான் இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.