நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்

 

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடனான சந்திப்பின்போது, அவர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசவில்லை என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதற்காக அம்மாநில மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவர்களை தன் பக்கம் பா.ஜ.க. இழுத்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரும், மேற்கு வங்க மக்கள் மத்தியில் பிரபலமானருவான மிதுன் சக்கரவர்த்தியை பா.ஜ.க. தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக நீண்ட நாட்களாக ஒரு பேச்சு உலாவி கொண்டு இருக்கிறது.

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்
மிதுன் சக்கரவர்த்தி, மோகன் பகவத்

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மிதுன் சக்கரவர்த்தியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். இது அவர் பா.ஜ.க.வில் இணைவார் என்ற செய்திக்கு வலுசேர்ப்பதாக இருந்தது. ஆனால் அதனை மிதுன் சக்கரவர்த்தி மறுத்தர். இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கொல்கத்தாவில் நள்ளிரவில் மிதுன் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மேற்கு வங்கத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க..வில் இணைவார் என்று கூறப்படுகிறது.

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்
பிரதமர் மோடி

ஆனால் மிதுன் சக்கரவர்த்தியை சந்தித்து பேசிய பிறகு விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் கூறுகையில், அவரது தேசபக்தி மற்றும் ஏழைகள் மீதான காதல் பற்றிய கதைகளை கேட்டு என் இதயம் துக்கமடைந்தது. மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணைவாரா அல்லது மாட்டாரா என்பது இன்று தெரிந்து விடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.