மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததில் மோடிக்கு பங்கு உண்டு… பா.ஜ.க. பொதுச் செயலாளர் தகவல்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததில் மோடிக்கு பங்கு உண்டு… பா.ஜ.க. பொதுச் செயலாளர் தகவல்

மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததில் மோடிக்கு பங்கு உண்டு என்று பா.ஜ.க.வின் பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா வெளிப்படையாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசுகையில் கூறியதாவது: திரைக்கு பின்னால் உள்ள உண்மையை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது குறித்து நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. நான் இதற்கு முன் யாரிடம் இது குறித்து பேசியது கிடையாது. முதல் முறையாக இந்த மேடையில் அதனை சொல்கிறேன்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததில் மோடிக்கு பங்கு உண்டு… பா.ஜ.க. பொதுச் செயலாளர் தகவல்
கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் கமல் நாத் அரசை கவிழ்த்ததில் முக்கிய பங்கு வகித்த நபர் ஏதேனும் ஒருவர் இருந்தால் அது மோடிதான், தர்மேந்திர பிரதான் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜயவர்கியா வெளிப்படையாக பேசியது மேடையில் இருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், பா.ஜ.க.வினருக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வை தாக்குவதற்கு காங்கிரசாருக்கு வாய்ப்பு வழங்கியதாக சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததில் மோடிக்கு பங்கு உண்டு… பா.ஜ.க. பொதுச் செயலாளர் தகவல்
கைலாஷ் விஜயவர்கியா

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா கூறுகையில், ஆரம்பம் முதல் நாங்கள் கூறிக்கொண்டே இருந்ததே விஜயவர்கியா ஒப்புக்கொண்டார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு வீழ்ச்சிக்கு அந்த கட்சியின் உட்கட்சி மோதலே என்று பா.ஜ.க. பொய்யாக குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது உண்மை விஜயவர்கியாவால் வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார்.