Home தமிழகம் “2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதல் கையெழுத்து மட்டுமல்ல, இனி மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு கையெழுத்து போட உள்ளே வரமுடியாது. துக்ளக் ஆண்டுவிழாவிற்கு அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் அதிமுக இருக்கிறது. எளிய முதல்வராக, சாமானிய மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட திட்ட நடவடிக்கைகளால் அதிமுக வாக்குவங்கி அதிகரித்துள்ளது. குடிமரமாத்து பணிகள், அம்மா மினி கிளினிக், அம்மா நகரும் ரேசன் கடை போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கொடுத்த 2ஜிபி டேட்டாவிற்கு கூட மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். மக்கள் டாட்டா காட்டுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் ஏளனம் செய்கிறார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5.சதவீத ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து இல்லை, மாமூல் வசூல் இல்லை, நில அபகரிப்பு இல்லை, ரவுடிசம் இல்லை, தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை, இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சியை மக்கள் பின்னோக்கி பார்க்கிறார்கள். மக்களுக்கு மறதி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, அதிகார பகிர்வு இருந்தது மதுரையில் ஒரு முதல்வர், சென்னையில் ஒரு முதல்வர், கோவையில் ஒரு முதல்வர் என திமுகவினர் அதிகார பகிர்வுடன் குடும்ப ஆட்சி நடத்தினார்கள். மக்களின் சொத்து மக்களிடம் தான் இருக்க வேண்டும், இவற்றை அபகரிக்கும் நிலைமை திமுக ஆட்சியில் இருந்தது. திமுக கிராம சபை கூட்டம் நடத்தியது போன்று அதிமுக கிராமம் தோறும் சென்று திமுக கடந்த கால ஆட்சியில் நடத்தவற்றைகளை மக்களிடம் எடுத்து சென்று திமுகவை விரட்டி அடிப்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வோம். அதிமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ஒரே ஒரு கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். திமுக சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டர்கள். 2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்று திமுக கூறியது. எந்த ஊரில் கொடுத்துள்ளனர், ஒருவருக்கு கூட தரவில்லை

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் கலை திமுகவிற்கு கைவந்தது.திமுக நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நம்பி 5பவுன் நகைகடன் வைத்த மக்கள் திருப்ப முடியமால் தவித்து வருகின்றனர். மக்களை ஏமாற்றும் செயலை ஒருமுறை செய்ய முடியும், ஆனால் தொடர்ந்து மக்கள் ஏமாறமாட்டர்கள். திமுகவின் கபட நாடகம், பொய் பிரச்சாரம் இனி எடுபடாது” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது...

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பத்திரங்களில்...

திமுகவுக்கு பயம்… கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்குகிறது: எல். முருகன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். அமமுகவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பாஜக மத்தியஸ்தம்...

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....
TopTamilNews