அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்யுங்கள் – கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை!

 

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்யுங்கள் – கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை!

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்யுங்கள் – கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை!

எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் தரமற்ற குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பெரம்பலூரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் தொட்டாலே சிமெண்ட் உதிரும் வண்ணம் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவை தொடர்ந்து பல இடங்களில் அதே புகார்கள் எழுந்து வரும் நிலையில் கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.