ஐபிஎல் முடிந்து 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு பிசிசிஐ வழங்கும் டபுள் ட்ரீட்!

 

ஐபிஎல் முடிந்து 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு பிசிசிஐ வழங்கும் டபுள் ட்ரீட்!

இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் ஆடியபோது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறுநேர ஆறுதலாக ஐபிஎல் நடைபெற்றது. எப்போதும் திருவிழா போல் நடைபெறும் ஐபிஎல் கடந்த இரு சீசன்களாக ஆள் அரவமற்று நடைபெற்று வந்தது. இந்தாண்டும் சீசனின் முதல் ரவுண்ட் ஆட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தன. ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள் கொரோனா நுழைந்து ஆட்டம் காட்டியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிசிசிஐ உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்தியது. எஞ்சிய போட்டிகளை இந்தியாவில் நடத்த சாத்தியமில்லை என எண்ணிய பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டுமிட்டுள்ளது.

ஐபிஎல் முடிந்து 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு பிசிசிஐ வழங்கும் டபுள் ட்ரீட்!
ஐபிஎல் முடிந்து 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு பிசிசிஐ வழங்கும் டபுள் ட்ரீட்!

அதற்கான வேலைகளும் செம்மையாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை தொடரை நடத்திமுடிக்க அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். தற்போது அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க பிசிசிஐ இன்னொரு ஸ்வீட் செய்தியையும் வழங்கியிருக்கிறது. இந்தியா சார்பில் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை எங்கு, எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் முடிந்த அடுத்த இரண்டே நாட்களில் (அக்.17) டி20 உலகக்கோப்பையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தத் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவே ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. மொத்தமாக 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்ளவிருக்கின்றன. உலக தரவரிசைப் பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பெற்றிருக்கும் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, நேபாளாம், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பபூவா ஆகிய எட்டு அணிகள் தகுதிச்சுற்றில் கலந்துகொள்ளும்.

ஐபிஎல் முடிந்து 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு பிசிசிஐ வழங்கும் டபுள் ட்ரீட்!

இந்த எட்டு அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அதன்படி இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையும். இதற்கான தகுதிச்சுற்று தான் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் தலா ஆறு அணிகள் கொண்ட இரு பிரிவுகள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணிகள் போட்டியிட்டு கோப்பையை வெல்லும். அந்த இறுதிப் போட்டி நவம்பர் 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் போட்டிகளும் ஓமனிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெறுகின்றன. கிரிக்கெட் ரசிகர்க்ளை விடாமல் இன்பத்தில் திளைக்க வைக்க பிசிசிஐ டபுள் விருந்து படைத்திருக்கிறது. எஞ்ஜாய் எஞ்சாமி!