‘ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும்’..815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரம் வெளியீடு!

 

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும்’..815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரம் வெளியீடு!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவலர்கள் விண்ணை நோக்கி சுட்டு கூட கூட்டத்தை கலைத்திருக்கலாம். ஆனால் போராட்டகாரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு முடிவுகள் இன்று வெளியாகின.

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும்’..815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரம் வெளியீடு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்றும் தமிழக அரசுக்கு ஆலைக்கு சீல் வைத்தது செல்லும் என்றும் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த ஆலையால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளும் மக்களிடையே இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பை பெற்றது. தூத்துக்குடி மக்கள் மட்டும் அல்லாது பல அரசியல் தலைவர்கள் நீதிபதிகளின் தீர்ப்புக்கு மனமார்ந்த வரவேற்பை தெரிவித்தனர்.

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும்’..815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரம் வெளியீடு!

இன்று காலை தீர்ப்பு வெளியான போது, 815 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பின் விவரங்கள் மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதில், உரிய அனுமதி இல்லாமல் விரிவாக்க பணியை மேற்கொள்ளும் போதே ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை பார்க்கும் போது வேதாந்தா நிறுவன தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க முடியாத ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம் என கூறியது நினைவுகூரத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.