பிரதமர் மோடி ஆட்சியில் எல்லையில் 4,700 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை.. பீதியில் சீனா.. பா.ஜ.க. தலைவர் தகவல்

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லையில் 4,700 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை.. பீதியில் சீனா.. பா.ஜ.க. தலைவர் தகவல்

பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் அருணாசல பிரதேசத்திலிருந்து லடாக் வரை 4,700 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளை அமைத்து எல்லைகளை உள்ளடக்கியதால் சீனா பீதியில் உள்ளது என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பீகாரில் அவுரங்கபாத்தில் தேர்தல் பிரச்சார கூட்டதில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: இந்த நேரத்தில் சீனாவில் ஒரு பீதி நிலவுகிறது. ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் அருணாசல பிரதேசத்திலிருந்து லடாக் வரை 4,500 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளை உருவாக்கி எல்லை பகுதிகளை மோடி ஜி உள்ளடக்கியுள்ளார். நாடு வேகமாக முன்னேறி வருகிறது. பாகிஸ்தானின் தவறான நிர்வாகத்திற்கு மோடி ஜியின் தலைமை ஒரு பொருத்தமான பதிலை அளித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லையில் 4,700 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை.. பீதியில் சீனா.. பா.ஜ.க. தலைவர் தகவல்
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

அதே வழியில் நாட்டின் வீரர்கள் சீனாவுக்கு ஒரு பதிலை அளித்து இந்தியா எப்படி மோடி ஜியின் தலைமையில் செல்கிறது என்று சொல்லியுள்ளனர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மக்களை லாலுவின் காட்டாட்சியிலிருந்து விடுவிக்கும் பணியை செய்தது. முன்னர் கொள்ளை உத்தரவில் இயங்கிய அரசு, இப்போது சட்டம் மற்றும் ஒழுங்கை பின்பற்றி இயங்குகிறது.

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லையில் 4,700 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை.. பீதியில் சீனா.. பா.ஜ.க. தலைவர் தகவல்
பிரதமர் மோடி

தேர்தலில் பெரிய வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் குழப்பம் அடைகிறார்கள். வேட்பாளரும் அதன் கட்சியும் இதுவரை என்ன செய்தார்கள் என்பதன் அடிப்படையில் வாக்களியுங்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் இன்று வளர்ச்சிக்கான புதிய செயல் திட்டத்துடன் வந்துள்ளது. மோடி ஜி அவர்களுக்கு வளர்ச்சியின் அர்த்தத்தை கற்பித்தற்கு அவர்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.