அமித்ஷாவை தொடர்ந்து ஜே.பி நட்டா டிச.30ல் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

 

அமித்ஷாவை தொடர்ந்து ஜே.பி நட்டா டிச.30ல் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த டிச.30ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன. தற்போது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியான நிலையில், விநாயகர் சிலை விவகாரம், இ பாஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

அமித்ஷாவை தொடர்ந்து ஜே.பி நட்டா டிச.30ல் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைந்தது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என அறிவித்தார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. இருப்பினும், அதிமுக பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கும் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்க முடிவு செய்திருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

அமித்ஷாவை தொடர்ந்து ஜே.பி நட்டா டிச.30ல் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். 2 நாள் பயணமாக அவர் டிச.30ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.