பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டி.. நட்டா அறிவிப்பு

பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டி.. நட்டா அறிவிப்பு

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வரும் நவம்பர் 29ம் தேதி முடிவடைய உள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளதால் அம்மாநில கட்சிகள் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டன. அதிலும் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது.

பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டி.. நட்டா அறிவிப்பு
ஜே.பி. நட்டா

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பீகார் மாநில பா.ஜ.க. காரியசமிட்டியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மற்றும் லோக் ஜனசக்தி இணைந்து போட்டியிடும். தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் முத்தரப்பு கூட்டணி தேர்தலில் போட்டியிடும்.

பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டி.. நட்டா அறிவிப்பு
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

மத்திய மற்றும் மாநில அளவில் கட்சி மேற்கொண்ட நல பணிகள் குறித்து தொண்டர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பீகார் மற்றும் வெளியில் உள்ள எதிர்க்கட்சிகள் பயனற்ற சக்தியாக மாறி விட்டன. மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இந்த கட்டத்தில் தொடங்கிய அர்ப்பணிப்புள்ள கோவிட்-19 மருத்துவமனைகள், மாஸ்க்குகள் மற்றும் பி.பி.இ. கருவிகள் போன்ற நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களிடம் நட்டா விரிவாக விளக்கினார்.