பாமகவை எதிர்த்து போட்டியிடும் பிரபல பத்திரிக்கையாளர்!

 

பாமகவை எதிர்த்து போட்டியிடும் பிரபல பத்திரிக்கையாளர்!

அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறையில் பிரபல ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் போட்டியிடுகிறார்.

யார் இந்த கோமல் அன்பரசன்? என்ற கேள்விக்கு இங்கே பதில். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்தார். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவராம். பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தியுள்ளார். கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

பாமகவை எதிர்த்து போட்டியிடும் பிரபல பத்திரிக்கையாளர்!

இப்படி படிக்கும்போதே ஊடகத்துறையில் கால்பதித்த கோமல், அப்போதில் இருந்து பல்வேறு சிற்றிதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், வெகுமக்கள் இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். ஊடகப்பணி மட்டுமின்றி, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என பல தளங்களிலும் இயங்குபவர். ‘காவிரி’ என்ற அமைப்பை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் நற்பணிகளைச் செய்து வருபவர். இதன் பயனாக
மக்கள் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய இவர், முன்பு அத்தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கூடவே தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் 5 ஆண்டுகள் முக்கிய பொறுப்பிலிருந்தவர் கோமல். பின்னர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மேனேஜிங் எடிட்டராக பணியாற்றினார்.