‘ ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு’ ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு சீல்!

‘ ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு’  ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு சீல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையிலும், பாதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

‘ ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு’  ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு சீல்!

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால், நெல்லை டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. நகைக்கடை ஊழியர்கள் ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாலும்
போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்பதாலும் வரும் 15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு’  ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு சீல்!

மேலும்,சிப்பந்திகளுக்கு அன்றாடம் செய்யப்படும் முறையான பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என்றும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் சிப்பந்திகள் தங்கும் அறை, மெஸ் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.