திமுகவில் இணைந்த, பாஜக மகளிர் அணி நிர்வாகி

 

திமுகவில் இணைந்த, பாஜக மகளிர் அணி நிர்வாகி

ஈரோடு

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த பாஜக மகளிர் அணி மண்டல செயலாளர் கங்கா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள், அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியில் புதிததாக இணைந்தவர்களுக்கு கருப்பு,சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.