’இன்னும் 77 நாட்களில்…’ ஜோ பைடனின் அதிரடி முடிவு!

 

’இன்னும் 77 நாட்களில்…’ ஜோ பைடனின் அதிரடி முடிவு!

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான வாக்குப் பதிவு நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். இம்முறை யார் அடுத்த அதிபர் எனும் குழப்பம் நீட்டித்து வருகிறது.

’இன்னும் 77 நாட்களில்…’ ஜோ பைடனின் அதிரடி முடிவு!

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264; ட்ரம்ப் 214 என்று உள்ளது. பைடன் வெற்றி பெற இன்னும் 6 ஆதரவு தேவை. தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.

ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியாக பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்ததில் அமெரிக்காவை இணைப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதனால், சூழலியல் செயற்பாட்டாளர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது.

’இன்னும் 77 நாட்களில்…’ ஜோ பைடனின் அதிரடி முடிவு!

தற்போதைய நிலையில் அதிபருக்கான வெற்றியைத் தொட்டுவிடும் நிலையில் இருப்பது ஜோ பைடன் தான் அதனால், தனது ட்விட்டர் பக்கத்தில் ”இதே நாளில்தான் அதிபர் ட்ரம்பால் பாரீஸ் பருநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியது. இன்னும்77 நாட்களில் மீண்டும் அதில் இணைவோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.