’ஒரு நகரத்தில் ஜோ பைடன் வெற்றி’ அமெரிக்க தேர்தல் அப்டேட்

 

’ஒரு நகரத்தில் ஜோ பைடன் வெற்றி’ அமெரிக்க தேர்தல் அப்டேட்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று பரபரப்பாக நடந்திருக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார்.

துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

’ஒரு நகரத்தில் ஜோ பைடன் வெற்றி’ அமெரிக்க தேர்தல் அப்டேட்

அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் குறித்த சர்வே ஒன்றில் ஜோ பைடனே முன்னிலையில் இருந்தார். அது மட்டுமல்ல, பல சர்வேக்களின் முடிவுகள் ஜோ பைடனுக்கு ஆதரவாகவே வந்திருக்கின்றன.

பெனிசில்வேனியா எனும் மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்தது. இதற்கு தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். ‘இதனால் கடும் விளைவுகள் ஏற்படும்’ என கோபத்துடன் கூறியிருக்கிறார்.

’ஒரு நகரத்தில் ஜோ பைடன் வெற்றி’ அமெரிக்க தேர்தல் அப்டேட்

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் எனும் நகரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டன. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே ஐந்து மட்டும்தான். அந்த ஐந்து வாக்குகளும் ஜோ பைடனுக்கே விழுந்தன. இதனால் அந்தச் சிறிய நகரத்தில் பைடன் வெற்றி பெற்றார்.