அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் ஜோ பிடன்

 

அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் ஜோ பிடன்

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் ஜோ பிடன்

இந்நிலையில் ஜோ பிடன், துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்து.

கமலா ஹாரீஸ் மீது அவர் அமெரிக்கர்தானா என்ற சந்தேகத்தை ட்ரம்ப் கட்சியினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதேபோல ஜோ பிடன், சீனாவுக்கு ஆதரவானவர் என்றும் வாக்காளர் மத்தியில் ஓர் எண்ணத்தை விதைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜோ பிடன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் ஜோ பிடன்
அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் என்பது குறிப்பிட்டத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில், 13 லட்சம் வாக்குகள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசம் உள்ளது. எனவே, அதைக் குறி வைத்து, ஜோ பிடன் தனது தேர்தல் அறிக்கையில் பல சலுகைகளை அறிவித்துள்ளார்.

குறிப்பாக, எச் 1பி விசா வழங்குவதில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், குடும்பத்தினருக்கு விசா கோருவதில் உள்ள சிரமங்கள் கலையப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஜோ பிடன்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்பது இந்தியாவின் பல ஆண்டுகள் முயற்சி. அதற்கு தான் ஆதரவு அளிப்பேன் என்று ஜோ பிடன் கூறியுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் ஜோ பிடன்

நிரந்தர குடியுரிமையான க்ரீன் கார்டு வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவதால் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்காது உள்ளிட்ட பல வாக்குறுதிகளும் இந்தியர்களை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரீஸ் பேசுகையில் இந்தியாவுக்கு தான் வந்து சென்ற சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.