அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன்… முடிந்தது ட்ரம்ப் ஆட்சி

 

அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன்… முடிந்தது ட்ரம்ப் ஆட்சி

அமெரிக்காவில் தேர்தல் முடிவுக்காக உலகமே காத்திருந்தது. நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் விறுவிறுப்போடு நடந்தது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபராவதற்கு மெஜாரிட்டியான 270 வாக்குகளை நோக்கி இருவரும் முன்னேறினர். ஆனால், ஜோ பைடன் 264 – ட்ரம்ப் 214 என்ற வாக்குகளோடு குழப்பம் நான்கு நாட்களாக நீடித்து வருகிறது.

அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன்… முடிந்தது ட்ரம்ப் ஆட்சி

கொரோனா தொற்று காரணமாகப் பலரும் அஞ்சல் வாக்குகளைச் செலுத்தியதால், அவற்றை எண்ணுவதற்கு தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், தனக்கு தோல்வி நெருங்கும் இடங்களில் எல்லாம் மோசடி நடந்ததாக ட்ரம்ப் குற்றச்சாட்டு கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிமன்றத்தை நாடுகிறார்.

அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன்… முடிந்தது ட்ரம்ப் ஆட்சி


தற்போது வெளிவந்த முடிவில் ஜோ பைடன் 270 வாக்குகளைக் கடந்து மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

அரிஸோனா, நிவெடா ஆகிய மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்று தற்போது 290 வாக்குகளைப் பெற்றுவிட்டார். இதனால், மெஜாரிட்டியை விட 20 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். அமெரிக்க அதிபர்களில் அதிக வாக்குகள் பெற்றவராக ஜோ பைடன் விளங்குகிறார்.