கொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை! – ரத்தன் டாடா

 

கொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை! – ரத்தன் டாடா

கொரோனா பாதிப்பு எதிர்பாராதது, இந்த நேரத்தில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமே தீர்வு இல்லை, இந்த நிலைமையை சமாளிப்பதற்கான வழிகளை நிறுவனங்கள் கண்டறிய வேண்டும் என்று டாடா குழுத்தின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
யுவர் ஸ்டோரி என்ற இணைய ஊடகத்துக்கு டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை! – ரத்தன் டாடாகொரோனா ஊரடங்கு காரணமாக, வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் பல இந்திய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. பல நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன. குறிப்பிட்ட துறை என்று சொல்ல முடியாமல் ஆட்டோமொபைல், சர்வீஸ் என எல்லாத் துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை! – ரத்தன் டாடா
இந்த நிலையில் ரத்தன் டாடா இணைய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நிறுவனம் தப்பிக்க சில விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது நியாயமானதும் அவசியமானதுமாக உள்ளது என்றும் கருதும் விஷயங்களில் மாற்றம் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பங்குதாரர்கள் அனைவரின்

கொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை! – ரத்தன் டாடா

நம்பிக்கையைப் பெறாமல் உங்களால் உங்கள் தொலை தொடர்ந்து செய்ய முடியாது. இந்த நேரத்தில் வீட்டில் இருந்தே வேலை என்பது ஒரு நல்ல தீர்வு. ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது மட்டும் உங்களுக்கு தீர்வு தந்துவிடாது. அந்த ஊழியர்கள் மீதும் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. வணிகம் என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் இல்லை. அது சரியானதைச் செய்து வாடிக்கையாளர், பங்குதாரர், பணியாற்றுபவர் என அனைவரின் நம்பிக்கையும் பெறுவதும் ஆகும்” என்றார்.