குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா

குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா

தன்னை குப்பை என்ற காங்கிரசுக்கு, குறுகிய மனப்பான்மை உடையவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள் என்று பா.ஜ.க.வில் இணைந்த ஜிதின் பிரசாதா பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ஜிதின் பிரசாதா கடந்த புதன்கிழமையன்று யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் இணைந்தார். ஜிதின் பிரசாதா காங்கிரசிலிருந்து வெளியேறிய அரை மணி நேரத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜிதின் பிரசாதா கட்சியை விட்டு வெளியேறியதில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைகிறது. இது குப்பைகளை குப்பை தொட்டியில் வீசும் சாதாரண செயல்முறை போன்றது என்று பதிவு செய்து இருந்தது.

குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா
காங்கிரஸ்

ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த பதிவை மத்திய பிரதேச காங்கிரஸ் அழித்து விட்டது. தன்னை குப்பை என்று காங்கிரஸ் விமர்சனம் செய்ததற்கு ஜிதின் பிரசாதா பதிலடி கொடுத்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜிதின் பிரசாதா அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு காங்கிரசுடன் 3 தலைமுறை நீண்ட தொடர்பு உள்ளது. எனவே இது (பா.ஜ.க.வில் இணைந்தது) எளிதான முடிவு அல்ல. நிறைய சிந்தனையுடனும், மக்களுடன் கலந்துரையாடலுடனும், என் மனசாட்சியின் குரலை கேட்பதாலும் நான் இதை செய்தேன்.

குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா
பிரதமர் நரேந்திர மோடி

தற்போதைய சூழ்நிலையில் பா.ஜ.க. மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மிகவும் திறமையானது. எதிர்கால தலைமுறையினருக்கும் இந்த கட்சி பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். நான் எந்தவொரு கருத்தையும் ( குப்பை என்று காங்கிரஸ் கூறியது குறித்து) கூற மாட்டேன். எல்லோரும் விமர்சிக்க சுதந்திரம் உடையவர்கள். சிறிய மனப்பான்மை உடையவர்கள் சிறியவர்களாகவே இருப்பார்கள். அனைவரின் விமர்சனத்தையும் நான் பிரசாதமாக பெறுவேன். எனது முடிவு சரியானது மற்றும் நாட்டின் நலன் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.