கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் மோடி படம்.. பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர் கருத்தால் பரபரப்பு

கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் மோடி படம்.. பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர் கருத்தால் பரபரப்பு

கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் பிரதமர் மோடி இடம் இருந்தால் நியாயம் என்று பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி தலைவர் ஒருவதே பேசியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் பிரதமரின் மோடி படம் இடம் பெற்று இருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் மோடி படம்.. பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர் கருத்தால் பரபரப்பு
தடுப்பூசி செலுத்தியதற்காக வழங்கப்படும் சான்றிதழ்

இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சியே தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் இடம் பெற்றுள்ளது போல் கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் பிரதமரின் படம் இடம் பெற வேண்டும் என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் தேசிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழிலும் மோடி படம்.. பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர் கருத்தால் பரபரப்பு
ஜிதன் ராம் மாஞ்சி

இந்த கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி தனது டிவிட்டர் பக்கத்தில், நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் நற்பெயர் வாங்குகிறார். நாட்டில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களிலும் அவரது (பிரதமர் மோடி) புகைப்படம் அச்சிடப்பட வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும் என பதிவு செய்துள்ளார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி தலைவரை கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் மோடி படம் இடம்பெற வேண்டும் கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.