முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடனை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம் (ரூ.5,666 கோடிக்கு 1.15 சதவீத பங்குகள்), தனியார் முதலீட்டு நிறுவனமான விஸ்தா (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்), ஜெனரல் அட்லாண்டிக் (ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகள்), கே.கே.ஆர். நிறுவனம் (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்) ஆகியவை ஜியோவில் முதலீடு செய்தன.

ஜியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு அபுதாபியை சேர்ந்த முபதாலா முதலீட்டு நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.9,093.6 கோடி முதலீடு செய்துள்ளது. அதாவது ஜியோவின் 1.85 சதவீத பங்குகளை ரூ.9,093.6 கோடிக்கு முபதாலா நிறுவனம் வாங்கியது. இந்த சூழ்நிலையில், தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் ஜியோவில் மேலும் ரூ.4,546.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது. இதனையடுத்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் பங்கு மூலதனத்தை 2.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சில்வர் லேக், ஜியோ

பேஸ்புக், சில்வர் லேக், விஸ்தா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். முபதாலா ஆகிய நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து மொத்தம் ரூ.92,202.15 கோடி முதலீட்டை திரட்டி விட்டார். இதற்கிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்த்தின் ரூ.53,124 கோடி மதிப்பிலான உரிமை பங்கு வெளியீடு வெற்றிகரமாக முடிவடைந்தது. உரிமை பங்கு வேண்டி 1.59 மடங்கு அதாவது சுமார் ரூ.84 ஆயிரம் கோடிக்கு உரிமை வேண்டி விண்ணப்பங்கள் வந்து இருந்தன. ஆக, முகேஷ் அம்பானி கடனை அடைக்க தேவையான நிதியில் பெரும்பகுதியை திரட்டி விட்டார். அதனால் விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக மாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close