ரிலையன்ஸ் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஓராண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்

 

ரிலையன்ஸ் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஓராண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்

டெல்லி: ரிலையன்ஸ் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஓராண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக அளிக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ.401 திட்டம், ரூ.2599 திட்டம், ரூ.612 டேட்டா வவுச்சர், ரூ.1208 டேட்டா வவுச்சர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.


டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தாவின் மதிப்பு ரூ.399 ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதாவது ரூ.401 ரீசார்ஜ் பிளானை பெறுபவர்களுக்கு ஓராண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக கிடைக்கும்.