தடுப்பூசிகள் வீணாக்குவதில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

 

தடுப்பூசிகள் வீணாக்குவதில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் வீணாக்குவதில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

இந்த புதிய தடுப்பூசி கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தடுப்பூசியை வீணடிக்கும் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும் தடுப்பூசியில் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த மே மாதம் தடுப்பூசி வீணடித்த மாநிலங்களின் முழுமையான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது.

அதில், 33.95 சதவீதத்துடன் ஜார்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 15.79 சதவீதத்துடன் சத்தீஸ்கர் இரண்டாம் இடத்திலும் 7.35 சதவீதத்துடன் மத்தியப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தடுப்பூசியை வீணடிக்காமல் பயன்படுத்தியுள்ளன. மே மாதத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 790.60 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், 658.6 லட்சம் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.