ஹெச்டிபி வங்கியில் நகைகள் கொள்ளை : வங்கி ஊழியர்கள் கைது!

 

ஹெச்டிபி வங்கியில் நகைகள் கொள்ளை : வங்கி ஊழியர்கள் கைது!

தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகள் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் பொதுமக்கள் கடன் பெறுவது வழக்கமான ஒன்று. அரசு வங்கிகளில் தங்க நகை கடன்பெற்றால் அதற்கான வட்டி குறைவு. அதேபோல் தனியார் வங்கிகளும் தங்க கடனை வழங்கி வருகின்றனர். இதெற்கென தனிநபர் கடன் பிரிவில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஹெச்டிபி வங்கியில் நகைகள் கொள்ளை : வங்கி ஊழியர்கள் கைது!

புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஹெச்டிபி தனியார் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வங்கியில் வாடிக்கையாளர்கள்அடகு வைக்கும் தங்க நகைகளை கையாடல் செய்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை திருடியதாக வங்கி ஊழியர்கள் 3 பேர் கைவரிசை காட்டியுள்ளது அம்பலமானது. இதையடுத்து வங்கியின் மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்கள் 3 கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி நகைகள் கையாடல் ஆனது குறித்த விவரம் தெரியவந்த நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.